டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருநெல்வேலி, வேளாங்கண்ணி, எர்ணாகுளம், ஹவுராவுக்கு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், ஹவுரா மற்றும் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :8 ஏப்ரல் 2016, 8:36 am IST

சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், ஹவுரா மற்றும் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் 06005: ஏப்ரல் 29 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ரயிóல் எண் 06006: மே 1 ஆம் தேதி எர்ணாகுள்ததில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்டையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பள்ளம், திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

ரயில் எண் 06002: மே 1 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுகல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சென்னை சென்ட்ரல் - ஹவுரா ஏசி சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் 00842: ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணஇக்கு ஹவுரா சென்றடையும். இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ரக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில்

ரயில் எண் 06016: ஏப்ரல் 14 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். ரயில் எண் 06015: ஏப்ரல் 15 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பள்ளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திரூவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.