நீட் தேர்வுக்கு 15 சதவீதம் மருத்துவ இடங்களே ஒதுக்கீடு: முதல்வர்
நீட் தேர்வில் தகுதி பெற்றோருக்கு புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீதம் இடங்களே ஒதுக்கப்படும்.


புதுச்சேரி
நீட் தேர்வில் தகுதி பெற்றோருக்கு புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீதம் இடங்களே ஒதுக்கப்படும். மீதமுளள 85 சதவீத இடங்களில் சென்டாக் ஒதுக்கீடு பெறப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி.நட்டாவை தில்லியில் சந்தித்தேன். அப்போது புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவரும் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு பாடப்பிரிவை தொடங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத ஒதுக்கீடும், மீதமுள்ள 85 சதவீதத்தில் புதுச்சேரி அரசுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்கும்.
பிளஸ் 2 முடித்து மருத்துவ கல்லூரிகளில் சேர நீட் தேர்வு அங்கிலம், இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் எழுதலாம். நீட் தேர்வின் மூலம் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடத்தில் 15 சதவீத இடம்தான் மத்திய அரசால் நிரப்பப்படும். மீதி இடங்கள் மாநில அரசின் மூலமே நிரப்பப்படும். மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து கட்டண நிர்ணயக்குழுதான் முடிவு செய்யும்.
தென் மாநில முதல்வர்கள் கூட்டம் .
வரும் 28-ம் தேதி தேசிய வளர்ச்சி மன்றம் சார்பில் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மற்றும் ஒரு அமைச்சரும் உறுப்பினராக உள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் சார்பில் நானும், ஆளுநரும் உறுப்பினராக உள்ளோம். இக்கூட்டத்தில் தென்மாநிலங்களுக்கு இடையில் உள்ள பிரச்னைகளும், மத்திய மற்றும் தென்மாநிலங்களுக்கு இடையில் உள்ள பிரச்னைகளும் விவாதிக்கப்பட உள்ளன.
புதுச்சேரியில் மணல் இல்லை. இது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. நிதி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னை புதுச்சேரிக்கும், மத்திய அரசுக்கும் இடையே உள்ளது. இது குறித்து விவாதிக்க உள்ளேன் என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...