விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை

புதுவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :28 டிசம்பர் 2016, 11:26 am

சுஜித்குமார்

புதுச்சேரி

புதுவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

புதுவை ரெட்டியார்பாளையம் மூலக்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தா (63). 25 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணி இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்த சாந்தா தினமும் காலையில் நடைபயிற்சிக்கு செல்வாராம். 

அது போல் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபயிற்சிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார். வீட்டு வாசலில் இருட்டில் பதுங்கியிருந்த மர்ம ஆசாமி கத்தியால் சாந்தாவின் கழுத்தை அறுத்து, வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று வீட்டின் அறை, அலமாறியில் எதையோ தேடியுள்ளார். சாந்தாவை குத்திய கத்தியை வீட்டின் தோட்டத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதனிடையே கழுத்து அறுக்கப்பட்ட சாந்தாவின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற கடைக்காரர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சாந்தா கிடந்தை கண்டு அக்கம் பக்கத்தினரை எழுப்பியுள்ளார். 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ. நாககராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சாந்தா உயிரிழந்தார். 

இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டது. சாந்தாவின் உடல் பிரதே பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சாந்தா அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடு போகவில்லை. வீட்டினுள் எந்த பொருளும் திருரு போகவில்லை. இதனால் கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.