ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மயில் அருந்தும் குடிநீர் தொட்டியை பராமரிக்கும் சமுக அக்கறை கொண்ட இளைஞர்கள்

இளைஞர்களின் இந்த முயற்சியை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாராட்டிச் செல்கின்றனர்.

News image
Updated On :23 ஜூலை 2016, 2:33 pm

சி. உதயகுமார்

விராலிமலை முருகன் கோயில் மலைக்குள் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து வருவதோடு பக்தர்களிடம் பூஜை சாமான்கள் வாங்கும் போது மயில்களுக்கும் இரை வாங்கிச் சென்று உணவளிக்குமாறு  தன்னார்வத்தோடு இளைஞர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் சிறப்பு பெற்றது.

அடர்ந்த மரங்கள் நிறைந்த இந்த மலையில் தேசிய பறவையான மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாகும்.

கடந்த காலங்களில் மலைமீது நூற்றுக்கணக்கான மயில்கள் இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் நிலையில் உள்ளது. மலைமேல் உள்ள மயில்களை கோயில் நிர்வாகம் கண்காணித்து பராமரித்து வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மயில்கள் பராமரிப்பில் கோவில் நிர்வாகத்தினர் அக்கறை காட்டுவதில்லை.

இதனால் மயில்கள் இரை தேடியும், தண்ணீருக்காகவும் மலையைவிட்டு கீழே இறங்கி வரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு வரும் மயில்கள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் அழிந்து வரும் நிலையில் விராலிமலையின் ஆன்மீக அடையாளம் என்றத்தலைப்பில் தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், அருகி வரும் தேசியபறவையான மயில்களை பரமாரிக்கவும் பாதுகாக்கவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், விராலிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எம். மணிகண்டன், பி. ராஜேஷ், சுகுமார், நாச்சி, அய்யப்பன் உள்ளிட்டோர் கடந்த ஒருவார காலமாக மலைக்குள் மண்குப்பையால் மூடிக்கிடக்கும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர் மேலும் தொட்டி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் தங்கள் சொந்த செலவில் புதிய குடிநீர் தொட்டிகள் அமைத்தும் மயில்களுக்கு இரையளிக்கும் இடத்தை பெயர் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரமரிப்பு பணியின் இடைநேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் மயில்கள் விரும்பி உண்ணும் தீவனமான கம்பு, ராகி, அரிசி,கோதுமை ஆகியவற்றை வாங்கி சென்று மயில்களுக்கு இரையளிக்கும்மாறு பிரச்சாரமும் மேற்கொள்கின்றனர்.

இளைஞர்களின் இந்த முயற்சியை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாராட்டிச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.