தற்கொலைக்கு முயன்ற நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேருக்கு ஜிப்மரில் தீவிர சிகிச்சை
தற்கொலைக்கு முயன்ற நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிசிக்சை அளிக்கப்படுகிறது.


தற்கொலைக்கு முயன்ற நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிசிக்சை அளிக்கப்படுகிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் நாகராஜ், சீத்தாராமன் ஆகியோர் திங்கள்கிழமை காலை சுரங்கம் 1 ல் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.
சுரங்கம் நுழைவு வாயில் இருந்த சுரங்க அதிகாரி அவர்களை நிறுத்தி உங்களால் எந்த வேலையும் நடைபெறவில்லை. இருவரும் 25 நாட்கள் வேலைக்கு செல்லவேண்டும் நிலையில் இருவரும் 15 நாட்கள் தான் வேலைக்கு வந்த்தாக கூறி இருவரில் ஒருவருக்குதான் வேலை என்று வெளியே செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த தொழிலாளர்கள் பூச்சி மருத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்னர்.
பின்னர் என்.எல்.சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
என்.எல்.சி. நிர்வாகத்தின் தவறான போக்கை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இருந்ததனர்.
ஆனால் நாகராஜ் , சீத்தாராமன் முந்திக்கொண்டாதாகவும் சங்க நிர்வாகிகள் விரைந்து வந்து மற்ற ஒப்பந்த ஊழியர்கள் வைத்திருந்த பூச்சு மருந்தை தட்டி விட்டதாகவும் உடனிருந்த ஒப்பந்த தொழிலாளர் தனவேலு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...