உலக யோகா தினம்: புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
உலக யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உள்பட ஆயிரக்கணக்கானோர் யோகாசனம் செய்தனர்.


உலக யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உள்பட ஆயிரக்கணக்கானோர் யோகாசனம் செய்தனர்.
இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே யோகாசனத்தை பொதுமக்கள் செய்து வருகின்றனர். உடல் ஆரோக்கியம், மன நிóம்மதி போன்றவற்றுக்கு யோகாசனம் மிகுந்த பயனுள்ளதாக விளங்குகிறது. தற்போது மேலை நாட்டினரும் யோகாசனத்தில் ஈடுபாடு கொண்டு செய்து வருகின்றனர்.
யோகாசனத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் உளளவர்கள் அறிய வேண்டும் என பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர முயற்சியால் ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி கடற்கரையில் உலக யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 6.30 மணிக்கு 34 பள்ளிகளைச் சேர்ந்த 4500 மாணவர்கள், 15 கல்லூரிகளைச் சேர்ந்த 700 மாணவர்கள், இளைய, மூத்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 800 மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யோகாசன செயல்விளக்கம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது:
யோகாசனம் மூலம் இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். யோகாசனம் மூலம் சிறுவர், சிறுமியருக்கு நல்ல உடல்வலிமை, ஆரோக்கியம் கிடைக்கும். சிறுவயதில் யோகா செய்தால் வயதான காலத்திலும் வலிமையுடன் திகழலாம். நானும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருவதால் உடல் நிலை சிறப்பாக உள்ளது என்றார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசு செயலர்கள் கோ.ராகேஷ் சந்திரா, எஸ்.சுந்தரவடிவேலு, இயக்குநர்கள் எஸ்.முனியசாமி, கேவி.ராமன், என்.ரெட்டி, எல்.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
சுற்றுலா, கல்வி, சுகாதாரத்துறை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...