பிரதமர் நரேந்திர மோடியுடன் புதுவை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் சந்திப்பு
புதுதாக பொறுப்புúற்றுள்ள புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் புதன்கிழமை புதுதில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்.


புதுதாக பொறுப்புúற்றுள்ள புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் புதன்கிழமை புதுதில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து முதல்வராக நாராயணசாமியும், அமைச்சர்களாக ஏ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம். கந்தசாமி, எப். ஷாஜகான், பி.கமலக்கண்ணன் ஆகியோர் பதவியேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக முதல்வர் நாராயணசாமி, பிற அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கி உத்தரவிட்டார். பல்வேறு துறை செயலாளர்கள், இயக்குநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு துறைகளின் செயல்பாடுகளை அறிந்தனர்.
புதுதில்லி பயணம்
அதனடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஏனாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் அனைவரும் ராஜமுந்திரியில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்றனர். புதன்கிழமை காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் குலாம் நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அதன் பின்னர் மதியம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினர்.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
பிரதமர் மோடியை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கேட்டுக் கொண்டோம். நிதி ஆதாரம் தொடர்பாக பேசினோம்.
குறிப்பாக மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு உள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ரோடியர் பஞ்சாலையை இயக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்கவும் மில்லிற்கு சொந்தமான நிலத்தை விற்க துரிதமாக அனுமதிக்க வேண்டும்.
சட்டப்பேரவை உள்ள புதுச்சேரியை மத்திய நிதி ஆணையத்தில் சேர்க்க வேண்டும், சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கித்தர வேண்டும், தொழில் மையம் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கித்த வேண்டும்.
மழை நிவாரணத் தொகை ரூ.136 கோடி தரவேண்டும்.
புதுச்சேரி விமான நிலையத்தில் விமான சேவை தொடங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். மாலை குடியரசுத் தலைவரையும், வியாழக்கிழமை மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேனி, தனவேல் ஆகியோரும் சென்று உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...