கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

இன்றும், நாளையும் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஆராதனை விழா

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பகவானின் 15-ம் ஆண்டு ஆராதனை விழா நடைபெறுகிறது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பகவானின் 15-ம் ஆண்டு ஆராதனை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை (மார்ச் 4) காலை 6.30 முதல் 10.30 மணி வரை ஹோமம், அதிஷ்டானத்தில் அபிஷேகம், அர்ச்சனையும், காலை 10.30 முதல் 12.30 மணி வரை ஆர்.கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், மாலை 4.30 முதல் 6 மணி வரை பகவானின் அனுபவங்களைப் பகிர்தல் நிகழ்ச்சியும், மாலை 6.15 முதல் 7.45 மணி வரை மயிலாடுதுறை அறிவகம் இல்லக் குழந்தைகளின் பக்திப் பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2-வது நாள் நிகழ்ச்சிகள்:

தொடர்ந்து, 2-வது நாளான சனிக்கிழமை (மார்ச் 5) காலை 6.30 முதல் 11 மணி வரை மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மஹா அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனையும், காலை 9 முதல் பகல் 12 மணி வரை பூஜ்ய ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜையும், காலை 11 முதல் மதியம் 1 மணி வரை பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து, மாலை 4.30 முதல் 6 மணி வரை தேவார இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.15 முதல் 7.45 மணி வரை நாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 8 மணிக்கு பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் வெள்ளி ரத வீதியுலா கோலாகலமாக நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி, அறங்காவலர்கள் மா தேவகி, மதர் விஜயலட்சுமி, ஜி.சாமிநாதன், டாக்டர் டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் முன்னாள் மேலாளரும், ஆஸ்ரம தன்னார்வலருமான ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் ஆஸ்ரம ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.