நாராயணசாமி எம்.எல்.ஏவாக நாளை பதவியேற்பு
நெல்லித்தோப்பு தொகுதியில் வென்ற முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.


புதுச்சேரி
நெல்லித்தோப்பு தொகுதியில் வென்ற முதல்வர் நாராயணசாமி நாளை புதன்கிழமை எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு முதல்வர் நாராயணசாக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார். மாநில காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...