பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா சென்றார். அங்கு நடந்த விழாவில் வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினர்.
பின்னர் பேசிய அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராகவே வாக்களித்தனர். கருப்பு பணத்தை ஒழிக்கவே எங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அரசு எடுத்துள்ள கருப்பு பண நடவடிக்கையால் பலர் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.
எனது இந்த முடிவு வெற்றியை கொடுக்கும். இந்த வெற்றி நாட்டு மக்களை சார்ந்தது. டிசம்பர் 30க்குப் பிறகு இந்த முடிவு தவறு என்று நிரூபணமானால் என்னை முச்சந்தியில் நிறுத்தி கேள்வி கேளுங்கள்.
2ஜி. நிலக்கரி ஊழலில் தொடர்பு உடையவர்கள் எல்லாம் இன்று 4 ஆயிரம் ரூபாய் பணத்துக்கு வரிசையில் நிற்கின்றனர் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கி பேசினார். அதேசமயத்தில் நேர்மையாக வாழ்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை நாட்டு மக்களின் சிரமத்தை உணர்கிறேன். இது வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே.
மேலும் கடல் தாண்டிச் சென்ற பணத்தை மீட்பதே இந்த அரசின் நோக்கம். என்று கூறியுள்ளார். இந்த விழாவை முடித்துக் கொண்டு பிற்பகலில் புறப்படும் மோடி, புனேவில் நடக்கும் மற்றொரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேச உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

பாஜகவுக்கு மக்கள் ஆசி உண்டு: கோயிலில் வணங்கிய பிறகு வேட்பாளர்கள் பேட்டி!

சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி! கொல்கத்தா வெற்றி!
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு


