மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல் 

அருந்ததியினர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி மரணமடைந்த மகேஸ்வரனின் குடும்பத்துக்கு

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 11:51 am

DIN

அருந்ததியினர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி மரணமடைந்த மகேஸ்வரனின் குடும்பத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அருந்ததியினர் சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி ஆதி தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன் தீக்குளித்து இறந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.அவருக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுக சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

அருந்ததியினர் சமுதாய மக்களின் சமூக,பொருளாதார முன்னேற்றத்துக்காக சிறப்புச் சலுகைகளை திமுக ஆட்சியில் தான் அளிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான கொள்கை முடிவு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.தொடர்ந்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன்காரணமாக இந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர்.

அதிமுக அரசு அருந்ததியினர் சமுதாயத்திற்கான 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல் வஞ்சித்துவிட்டது. அருந்ததியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகள் பற்றியும் கவலையில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக சார்பில், நல்லாட்சி அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.