ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எம்எல்ஏவை காணவில்லை என பெண்கள் காவல் நிலையத்தில் புகார்

காட்டுமன்னார்கோயிலில் சட்டப்பேரவை உறுப்பினரை காணவில்லை என பெண்கள் காவல் நிலையத்தி்ல் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :13 பிப்ரவரி 2017, 11:53 am

சிதம்பரம்: காட்டுமன்னார்கோயிலில் சட்டப்பேரவை உறுப்பினரை காணவில்லை என பெண்கள் காவல் நிலையத்தி்ல் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைதோப்பு புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி லதா (35). இவர் நேற்று காலை தனது பகுதியை சேர்ந்த 20 பெண்களுடன் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்கு சென்று தனது தொகுதி எம்எல்ஏ முருகுமாறன் காணவில்லை என புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கடந்த பிப்.10-ம் தேதி முதல் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு நானும் எங்கள் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள், எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமபட்டு வருகிறோம். அவற்றை சீர் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறனை சந்தித்து மனு அளிக்க சென்றோம்.

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ காணவில்லை. பல நாட்கள் தொடர்ந்து சென்றும் எம்எல்ஏவை பார்க்க இயலவில்லை. மேலும் சட்டப்பேரவை  அலுவலகத்திற்கு தொடர்ந்து வரவில்லை என கூறப்படுகிறது. எனவே காணாமல் போன எங்கள் தொகுதி எம்எல்ஏ முருகுமாறனை கண்டுபிடித்து தருமாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

காட்டுமன்னார்கோயில் பகுதியில் எம்எல்ஏ முருகுமாறன் காணவில்லை என்ற புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்படும் என அப்பெண்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.