விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி புதுவை இளம்பெண் 2000 கி.மீ தூரம் இருசக்கர வாகன பிரசார பயணம் துவக்கம்

ஜல்லிகட்டை நடத்த வலியுறுத்தி 2000 கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகன பிரசார பயணத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் பட்டதாரி மகேஸ்வரி திங்கள்கிழமை தொடங்கினார்.

News image
Updated On :2 ஜனவரி 2017, 11:45 am

சுஜித்குமார்

புதுச்சேரி : ஜல்லிகட்டை நடத்த வலியுறுத்தி 2000 கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகன பிரசார பயணத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் பட்டதாரி மகேஸ்வரி திங்கள்கிழமை தொடங்கினார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி மகேஸ்வரி. மோட்டார் சைக்கிள் வீரராக நமது  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை மீட்டு எடுக்கவும், பாரம்பரிய நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கையை பெருக்கவும், காட்சிப்படுத்தாத வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் புல்லட் மூலம் 2000 கி.மீ தூரம் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி மகேஸ்வரி திங்கள்கிழமை காலை கடற்கரை சாலை காந்தி திடலில்  பிரசார பயணத்தை துவக்கினார்.  புதுச்சேரியில் தொடங்கி கும்பகோணம், தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர்,  சென்னை வழியாக மீண்டும் 5-ம் தேதி புதுச்சேரி வந்தடைகிறார்.

மொத்தம் 2000 கிமீ தொலைவு பயணம் சென்று ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன். ஏற்கெனவே புல்லட்டில் பல மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளதால் அப்பயண அனுபவம் இதற்கு கைகொடுக்கும் என மகேஸ்வரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.