விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நிரந்தர ஜல்லிக்கட்டு, பீட்டாவுக்கு நிரந்தர தடை கோரி தொடர்ந்து 6-வது நாளாக  புதுவையில் தீவிர போராட்டம்

புதுச்சேரி: ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வேண்டும், பீட்டாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி 

News image
Updated On :22 ஜனவரி 2017, 9:14 am

சுஜித்குமார்

புதுச்சேரி: ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வேண்டும், பீட்டாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி  புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் தொடர்ந்து ,6-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவியர், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், காளை மாட்டை காட்சிப் படுத்தப்பட்டபட்டியலில் இருந்து விலக்க வேண்டும், அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 5 நாள்களாக தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் குவிந்து போராட்டம் நடத்தி வருவது போல், புதுவையிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஏஎப்டி மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 34 சமூக அமைப்புகள் அடங்கிய போராளிகள் இயக்கம் சார்பில் பந்த் போராட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 6-வது  நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஏஎப்டி மைதானத்தில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

இதற்கிடையே ஞாயற்றுக்கிழமை விடுமுறை நாளாதலால் பெண்கள் கூட்டம் அலைமோதியது். இதனால் போராட்டக்களமான ஏஎப்டி மைதானம்  கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஐல்லிக்கட்டை வலியுறுத்தி அனிஸ், கவினராஜ், சரவணன் ஆகியோர் மைதானந்திலியே பெரிய வட்டம் அமைத்து தொடர் மாரத்தான் ஓட்டம் மேற்கொண்ட னர்.

நிரந்தர ஜல்லிக்கட்டு, பீட்டாவுக்கு  நிரந்தர தடை விதிக்க கோரி போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.