இலுப்பூரில் இடி தாக்கி முதியவர் சாவு: 4-ம் வகுப்பு பள்ளி மாணவன் காயம்
இலுப்பூர் அருகே திங்கள்கிழமை இடி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். 4-ம் வகுப்பு பள்ளி மாணவன் காயங்களுடன்


இலுப்பூர் அருகே திங்கள்கிழமை இடி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். 4-ம் வகுப்பு பள்ளி மாணவன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள மாரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தன் மகன் சிலம்பன்(56) இவர் கடந்த திங்கள்கிழமை மாலை மாரப்பட்டி அருகேயுள்ள கருப்பர் ஊரணியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யத்தொடங்கி பலத்த சத்தத்துடன் சிலம்பன் மீது இடி தாக்கியுள்ளது
இதில் உடலின் ஒரு பகுதி கருகிய நிலையில் நிகழ்விடத்திலேயே சிலம்பன் உயிரிழந்தார். இவ்விபத்தில் அருகே விளையாடிக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சவுந்தர்(9) சிறுகாயங்களுடன் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இலுப்பூர் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...