அரசை நடத்த முடியாவிட்டால் சிம்மாசனத்தை விட்டு இறங்குங்கள்: மோடிக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொண்டு, விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள் அல்லது சிம்மாசனத்தை விட்டு


புதுதில்லி: வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொண்டு, விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள் அல்லது சிம்மாசனத்தை விட்டு இறங்குங்கள் என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல் காந்தி கடந்த சில நாட்களாகவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கம் இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்க தவறிவிட்டது மற்றும் பொருளாதார கொள்கைகள், சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 16 மாதங்களில் மோடி அரசு சமையல் எரிவாயு விலையை 19-வது முறையாக உயர்த்தியுள்ளது என்ற செய்தியை கையில் எடுத்து டுவிட்டரில் தாக்குதல் நடத்தியுள்ளார் ராகுல்.
சமையல் எரிவாயு விலை உயர்வு, ரேஷனில் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மீது விலை உயர்வு, வெற்று பேச்சுக்களை விடுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள் அல்லது சிம்மாசனத்தை விட்டு இறங்குங்கள் என்று தனது டுவிட்டர் பக்க பதிவில் கடுமையாக சாடியுள்ளார் ராகுல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...