விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி

News image
Updated On :28 நவம்பர் 2017, 10:22 am

சுஜித்குமார்

புதுச்சேரி:  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க உள்ளனர். 

என்.எல்.சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டுமென ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த ஜீலை மாதம் முதல் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமையில்  நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் , என்.எல்.சி நிர்வாக தரப்பில் தலைமை பொது மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.359 மற்றும் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற ஊதிய உயர்வு ரூ. 218 இரண்டும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 577 ஊதியமாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் என்.எல்.சி நிர்வாகம் தற்போது வழங்கிவரும் ரூ. 526 மட்டுமே வழங்க முடியும் என்றும், இதில் மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்ததால் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த ரூ.577யை தர நிர்வாகம் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. வரும் சனிக்கிழமை நெய்வேலியில் நடைபெறும்  பேரவை கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.