கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இன்குலாப். இவரது இயற்பெயர் சாகுல்ஹமீது. மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த இன்குலாப், படிப்பு முடித்து சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், நா.காமராசன் போன்ற தன்னுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து காத்திரமாகப் போராடியவர். தி.மு.க ஆதரவாளராக இருந்தவர், பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் இயங்கினார்.
கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் எரிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து அவர் இயற்றிய கவிதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கு இன்று வரை புரட்சிகீதமாக முழங்குகிறது. எப்போதும் தான்கொண்ட கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்தவர். `பலகாலமாக நீதி, நெறி என நம்மிடையே சாஸ்திரங்கள் வழியாகவும், கல்வியின் வழியாகவும் புகுத்தப்பட்ட `துருப்பிடித்த குப்பைகளை' நாம் களைய முற்பட வேண்டும்' என முற்போக்குக் கருத்துகளை மேடைகளில் அழுத்தத்துடன் எடுத்துரைத்தவர். அவர் எழுதிய காந்தள் நாட்கள் கவிதை தொகுப்புக்காக கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கசாக்கின் இதிகாசம் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


