கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 சிஆர்பிஎப் வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 4:38 am

DIN

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 சிஆர்பிஎப் வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக வழிமாறி சென்றுவிட்டார். அப்போது காரில் வந்த மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் தன்னை வழிமறித்து தனக்கு உதவுவதாகக் கூறி, முகாமுக்கு அழைத்து சென்று சிறை வைத்தனர். பின்னர் அதில் ஒருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை உடனிருந்த வீர்ர்கள் செல்போனில் படம் பிடித்தனர் என புகார் அளித்தார். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதுகுறித்து சிஆர்பிஎப் வீரர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். புகார் தெரிவித்த பெண் மற்றும் 3 வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மூன்று வீரர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து 3 வீரர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இவ்விவகாரத்தில் காவல்துறைக்கு சிஆர்பிஎப் முழுஒத்துழைப்பு அளித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.