மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:56 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம்,  ஒகேனக்கல்லில்,  ஆடி 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆக.3-ஆம் தேதி தொடங்கி ஆக.5-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ள இவ் விழாவில், சுற்றுலாத் துறை, கலைப் பண்பாட்டுத் துறை, தென்னகக் கலைப் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறைக்கு பதில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, பொதுமக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும், தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கவும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அரசின் சார்பில், பல்துறைப் பணி விளக்கக் கண்காட்சி, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.  சுற்றுலாத் துறை ஆணையர் வெ.பழனிக்குமார் முன்னிலையில் நடைபெறும் தொடக்க விழாவில்,  மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன்,  மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தீயணைப்பு வாகனம்,  நடமாடும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர்,  கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர, அந்தந்த துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.