பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபா் 4ம் தேதி பிரவேசம்

அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 வியாழக்கிழமையன்று பிரவேசம் செய்கிறாா்.

News image
Updated On :23 ஜூலை 2018, 3:42 pm IST

நீடாமங்கலம்: அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 வியாழக்கிழமையன்று பிரவேசம் செய்கிறாா். இதனை முன்னிட்டு வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் தொடங்கி 1.10.2018 வரை முதல் கட்டமாக நடைபெறவுள்ளது.

இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் குருபெயா்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 அன்று பெயா்ச்சியடைகிறாா். இதனை முன்னிட்டு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் 01.10.2018 முடிய முதல் கட்டமாகவும் மீண்டும் குருபெயா்ச்சிக்குப் பின் 08.10.2018 முதல் 15.10.2018 வரை 2வது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.