நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு


விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-இல் நடைபெற்றது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 16.49 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 12 லட்சத்து 69, 922 பேர் தேர்வை எழுதினர்.
அவர்களின் நீட் தேர்வு முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை பிற்பகலிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 40 சதவீதம் மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய் விட்ட நிலையில், மனமுடைந்த மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று விழுப்புரத்தில் பிரதீபா, தில்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவைக் கொலை செய்துதான் தமிழகத்தில் நிலைகொண்டது நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு. இந்த ஆண்டும் அதன் கொலைக் கரம் நீண்டுகொண்டே போவது பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...