பொதுமக்கள் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி


சென்னை: நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை குறிப்பிட்ட முதல்வர், காந்தி அறிவுறுத்தலின்படி, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணி பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அரசின் 88 அங்காடிகள் மூலம் கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...