பெங்களூரு: கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பணமும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துகள் குவித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், ரூ.4.52 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணம், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
என்.ஜி.கெளடய்யா, டி.ஆர்.சுவாமி ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சந்திரசேகர் கூறுகையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
இதில், டி.ஆர்.சுவாமியிடம் இருந்து ரூ.4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 மனைகள் மற்றும் 14 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கெளடய்யாவிடம் இருந்து ரூ.77 லட்சம் பணம், வங்கி கணக்குகளில் சுமார் ரூ.30 லட்சம், 18.2 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 3 கார்கள், 8 வீட்டு மனைகள், 2 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


