திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

காங்கிரஸ் கையில் மீண்டும் ஆட்சியை கொடுக்கக் கூடாது: பிரதமர் மோடி 

வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

News image
Updated On :6 அக்டோபர் 2018, 2:25 pm


புஷ்கர்: வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

ராஜஸ்தானின் புஷ்கர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆரோக்கியமான மக்களாட்சிக்கு பலம் வாய்ந்த எதிர்கட்சி தேவை என்றும், ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தோற்ற கட்சியே தற்போது எதிர்கட்சியாக இருப்பதாகவும் விமர்சித்தார். காங்கிரஸ் உண்மையாக தேர்தலில் போராடாதது ஏன்? பொய்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை பரப்புவதில் அவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? என கேள்வி எழுப்பியவர் சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதாக விமர்சித்தார். 

வாக்கு வங்கி அரசியலை வைத்து ஆட்சிக்கு வரும் கட்சியால் அரசு அதிகாரிகளிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் அதிகாரிகள் செயல்பட வைக்கப்படுவார்கள் என்றும், இதனால் அதிகாரத்துவம் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகவும், அரசியல் வளர்ச்சி காங்கிரஸூக்கு ஏற்கத்தக்கதல்ல எனக் கூறினார். 

மேலும், தாம் நாட்டிற்காக பிரதமராக இருந்தாலும் எப்போதும் பாஜகவின் சாதாரண தொண்டனாகவே தான் இருப்பதாதவும்,  தலைமை வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்று பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகக் கூறிய மோடி, காங்கிரஸின் கையில் மீண்டும் ஆட்சியை செல்லவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.