ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அப்போலோ மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின் அனுமதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 7:56 am IST


சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், வழக்கான சிகிச்சைகள் முடிந்ததும் இன்று  வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.