ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகரில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனந்தநாக் மாவட்டம் துரு ஷகாபாத், பட்காம் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்த வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அதேபோன்று, பட்காம் மாவட்டம் சாடூரா பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இரண்டு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு பயங்கரவாதியை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டை அடுத்து இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


