விண்வெளி தொடர்பான வினாடி- வினா போட்டி: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் காணலாம்

விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில்
விண்வெளி தொடர்பான வினாடி- வினா போட்டி: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் காணலாம்
Published on
Updated on
1 min read


புதுதில்லி: விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொலி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை அறிவித்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். செப்டம்பர் மாதம், சந்திரயான்-2, நிலவில் தரை இறங்குவதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காணும் வாய்ப்பை அவர்கள் பெறுவார்கள். அவர்களது வாழ்க்கையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இஸ்ரோ இது தொடர்பான தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

வினாடி வினா தொடர்பான தகவல்களை http://quiz.mygov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என இஸ்ரோ கூறியுள்ளது.

Participate and get a chance to watch the Landing of Chandrayaan 2 on the Moon live along with Honorable PM Narendra Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com