சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது: இம்ரான் கான் கண்டனம்

எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா
சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது: இம்ரான் கான் கண்டனம்


எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 40 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து பாகிஸ்தான் வாங்கிச் செல்லாம் என்று இந்தியா அறிவித்துள்ளது. 

இந்நிலையில், எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனித்தனியே பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

 ‘எல்லைத் தாண்டி அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1983-ஆம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தத்தையும், சர்வதேச மனிதாபின சட்டத்தையும் மீறி கொத்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி பொது மக்கள் என்று தெரிவித்துள்ள அவர், காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நாள்களாக காஷ்மீர் பகுதியில் நீடித்துவரும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com