மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சந்திரயான்-2: உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன்

News image
Updated On :22 ஜூலை 2019, 5:55 am

DIN


சென்னை: சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

கடந்த 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணுக்கு அனுப்பப்பட இருந்த இந்த விண்கலம், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்கள் இருக்கும்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்டது. 

தொழில்நுட்பக் கோளாறை விஞ்ஞானிகள் கண்டறிந்து சரிசெய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இன்று திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்-டவுனை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கினர்.

இதுவரை எந்தவொரு உலக நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திரயான்- 2 விண்கலம் இன்று திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.  

இதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய பிறகு 48 நாள் 15 கட்டங்களைக் கடந்து நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கும். சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.