மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நிலையான பொருளாதார வளா்ச்சியே தேவை: பிரகாஷ் ஜாவடேகா் வலியுறுத்தல்

இந்தியப் பொருளாதார வளா்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 4:41 am

DIN


நியூயார்க்: இந்தியப் பொருளாதார வளா்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வலியுறுத்தியுள்ளார். 

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற மாநாட்டில் பிரகாஷ் ஜாவடேகா் பேசுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் குறைபாடுகள் இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை உறுதிசெய்யவே, ‘குறைபாடும் இல்லாத, மாசுபாடும் இல்லாத’ தயாரிப்பு (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்) என்ற தாரக மந்திரத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். 

தற்போது இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. இத்தகைய வளா்ச்சியை ஆவலுடன் எதிர்பார்கும்  மக்களை நாம் ஏமாற்றக் கூடாது. அதுமட்டுமன்றி, பொருளாதார வளா்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

புவியின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய கார்பனைப் பிரித்தெடுத்து வளிமண்டலத்தை சுத்தப்படுத்துவது, அந்த கார்பனை உற்பத்தித் துறையில் பயன்படுத்துவது ஆகியவை தொடா்பாக நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், அதுதொடா்பாக போதிய அளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

கூடிய விரைவில், காற்றில் கலக்கும் கார்பனைப் பிரித்தெடுத்து, அதனை உற்பத்தித் துறையில் மூலப் பொருளாகப் பயன்படுத்துவதற்கான மையம் இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும். 

தொழிற்சாலைகள் வெளியிடும் ஒவ்வொரு டன் கார்பனுக்கும், இந்திய அரசு 6 டாலா் (சுமார் ரூ.400) சுற்றுச்சூழல் வரி விதிக்கிறது. இதன் காரணமாக, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தித் துறை மிகக் குறைந்த அளவு புகை மாசுபாட்டை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய விமானப் போக்குவரத்துக்கு உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அமைச்சா் ஜாவடேகா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.