கொல்கத்தா: இதய அறுவை சிகிச்சை மருத்துவர் கரோனாவால் பலி
கொல்கத்தாவில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்த நிதிஸ் குமார் என்பவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கொல்கத்தாவில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்த நிதிஸ் குமார் என்பவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி கூறுகையில்,
கொல்கத்தாவில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்தவர் நிதிஸ் குமார் (வயது 36). இவர் முதுநிலை இதய அறுவைச் சிகிச்சை படிப்பு முடிந்தவுடன் கொல்கத்தாவில் பணிபுரிய ஆரம்பித்தார்.
கரோனா பிரிவில் 25 நாள்கள் முன்பு வரை தொடர்ந்து பணியில் இருந்து வந்துள்ளார். சில நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கரோனா பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பணிபுரிந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...