/

மகாராஷ்டிரத்தில் 10,000-க்கும் அதிகமான காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 92 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் 10,000-க்கும் அதிகமான காவலர்களுக்கு கரோனா பாதிப்பு
Updated On :5 ஆகஸ்ட் 2020, 7:43 am

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் புதிதாக 92 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை இன்றுடன் (புதன்கிழமை) 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கரோனா தொற்றுக்கு முன்கள பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் 10,026 காவலர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்களில் 8,060 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் 1,42,458 பேர் கரோனாவிற்கு சிகிச்சைபெற்று வரும் நிலையில், 2,99,356 பேர் குணமடைந்தனர். 16,142 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.