தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி மறைவு
தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

சட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி காலமானார்

சட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி காலமானார்
தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சித்திபேட்டை மாவட்டம் துபாக் நகரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி (வயது 59). இவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
சில தினங்களாக காலில் ஏற்பட்ட நோய்த் தொற்றிற்காக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
ராமலிங்க ரெட்டியின் மறைவுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தெலங்கானா அமைச்சரவை உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...