ஈரோடு: காவல்துறையை கண்டித்து பாஜக சாலை மறியல்
காவல்துறையை கண்டித்து ஈரோட்டில் பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ஈரோடு, ஆக. 7: காவல்துறையை கண்டித்து ஈரோட்டில் பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், கரோனாவில் இருந்து விடுபட வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரியும் ஈரோடு மாநகர பகுதியில் நேற்று முன்தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
மாநகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்ட மாவட்ட காவல்துறை நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் அதை காவல்துறையினர் அகற்றியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் காவல்துறையினரின் இந்நடவடிக்கையை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா சார்பில் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் சரவணன், பழனிசாமி, இந்து முன்னணி மாநில நிர்வாகி சண்முகசுந்தரம், ஜெகதீசன், மகளிரணி புனிதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னா் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...