அசாமில் தீ விபத்தில் இருவர் பலி
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்தனர், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.


அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்தனர், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஜோர்ஹாட்டில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஞாயிறு இரவு 11.30 மணிக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீயின் பரவல் வேகமாக இருந்ததால் உள்ளே இருந்தவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இச்சம்பவத்தில் உள்ளே இருந்த சத்தியநாராயண அகர்வால் (வயது 54) மற்றும் கோம்தி தேவி (42) ஆகிய இருவர் பலியாகினர். மேலும், இருவர் பலத்த காயமடைந்தனர் என தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...