மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசியல் பரபரப்பு: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் 2-ம் கட்ட ஆலோசனை

தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 9:40 am

DIN


சென்னை: தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என அக்கட்சியில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், சி.வி சண்முகம் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்கு பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்து சுமார் அரை மணி நேரம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு சில அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்று ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அடுத்தடுத்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.