ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி அருகே கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.


ஊத்தங்கரை அருகே கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடால வலசை கிராமத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் ஆனந்தி (வயது 13) மற்றும் ராதிகா (13).
இவர்கள் இருவரும் கிராமத்தின் அருகே உள்ள மாணிக்க கவுண்டர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளுக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி சிறுமிகளின் உடலை மீட்டனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...