கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பஞ்சாபில் மோட்டார் வாகன வரி தள்ளுபடி: மாநில அரசு

பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை முழுமையாக தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு புதன்கிழமை பிறப்பித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 10:19 am

ANI

பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை முழுமையாக தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு புதன்கிழமை பிறப்பித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான தொழில்துறையினரும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அதில் சரக்கு வாகன உரிமையாளர்களும், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு சரக்கு வாகனம் மற்றும் கல்வி நிறுவன வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியை பஞ்சாப் அரசு முழுவதுமாக ரத்து செய்துள்ளது. 

வரி தள்ளுபடி குறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட உத்தரவில், 

“கரோனா பேரிடர் காலக்கட்டத்தில் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து வகையான சரக்கு வாகனங்கள், பயணிகள் பேருந்து மற்றும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு, மார்ச் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான மோட்டார் வாகன வரி தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.