உ.பி.யில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் போராட்டம்
உத்தரபிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உத்தரபிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே விவசாயக் குழு விடுத்த அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவை முன்பு சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...