கொல்கத்தாவில் பாஜகவின் மாநில தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜெ.பி.நட்டா
மேற்குவங்க மாநில பாஜகவின் தேர்தல் அலுவலகத்தை கொல்கத்தாவில் புதன்கிழமை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்து வைத்தார்.


மேற்குவங்க மாநில பாஜகவின் தேர்தல் அலுவலகத்தை கொல்கத்தாவில் புதன்கிழமை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்து வைத்தார்.
மேற்குவங்கத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது, அதற்கான பாஜகவின் மாநில தேர்தல் அலுவலகத்தை கொல்கத்தாவில் உள்ள ஹேஸ்டிங்ஸில் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் ஜெ.பி.நட்டா பேசுகையில்,
மேற்குவங்க கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாத்து உயிரோடு வைத்திருப்போம். மேற்குவங்கத்துடன் பாஜக நல்ல உறவை பகிர்ந்து வருகின்றது என கூறினார்.
மேலும் பெண்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகள், மனித கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவை மேற்குவங்கத்தில் அதிகளவில் நடக்கின்றது. இதனால் தான் குற்றப் பணியகத்திற்கு தரும் தகவல்களையும் மம்தா நிறுத்தியுள்ளார். கரோனா எண்ணிக்கையை மத்திய அரசிடம் பகிராமல் இருப்பது கூட அரசியல் ஆதாயங்களுக்காக தான் என விமர்சித்துள்ளார்
திறப்பு விழாவில் மேற்கு வங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...