ஜெ.பி.நட்டா வாகனம் மீது தாக்குதல்: உள்துறை செயலரிடம் அறிக்கை சமர்பிப்பு
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாநில உள்துறை செயலரிடம் அறிக்கையை மேற்குவங்க காவல்துறை சமர்பித்துள்ளது.


பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாநில உள்துறை செயலரிடம் அறிக்கையை மேற்குவங்க காவல்துறை சமர்பித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாத அளவில் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அதற்கான பணிகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு புதன்கிழமை சென்றாா். கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், வியாழக்கிழமை டைமண்ட் ஹாா்பா் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றாா். அவருடன் கட்சித் தலைவா்கள் ஏராளமானோா் சென்றனா். இந்தத் தொகுதியின் எம்.பி.யாக முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினா் அபிஷேக் பானா்ஜி உள்ளாா்.
இந்தத் தொகுதிக்கு ஜெ.பி. நட்டா வருவதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதையும் மீறி அவா் அந்தத் தொகுதிக்கு சென்ற நிலையில், அவா்களின் வாகனங்கள் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் பல காா்களின் கண்ணாடிகள் உடைந்ததோடு, கட்சித் தலைவா்கள் சிலரும் காயமடைந்தனா்.
குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய வாகனத்தில் ஜெ.பி.நட்டா பயணம் செய்ததால், அவருடைய வாகனத்துக்கு சேதம் ஏற்படவில்லை.
இதையடுத்து பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க காவல்துறை தலைவர், ஆளுநர் மற்றும் தலைமைச் செயலரிடம் தாக்குதல் குறித்த விரிவான அறிக்கையை கேட்டுள்ளது.
இந்நிலையில், மாநில காவல்துறை சார்பில் தாக்குதல் குறித்த அறிக்கையை மாநில செயலரிடம் சமர்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...