

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஜீப் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிலை தடுமாறிய ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு 3 வயது குழந்தை மற்றும் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 15 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.