குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: தொழில் முடக்க வறுமையைப் போக்க டீ விற்கும் வழக்குரைஞர்!

கொரோனா தொற்றால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் கொரோனாவால் வேலைவாய்ப்பு இழந்து டீ விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

News image
கரோனா: தொழில் முடக்க வறுமையைப் போக்க டீ விற்கும் வழக்கறிஞர்!
Updated On :24 ஜூலை 2020, 9:48 am

DIN

கொரோனா தொற்றால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வறுமையால் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் ஈரோட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் கொரோனாவால் வேலைவாய்ப்பு இழந்து டீ விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சையது ஹாரூன்(வயது 69) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்ககுரைஞராக கடந்த 41 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

கரோனா தொற்று தாக்கம் எதிரொலி காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னையில் இருந்து அவர் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்தார். குறுநாவல் வக்கீல் தொழிலில் தொய்வு ஏற்பட்டு வருமானமின்றி வறுமையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வாழ்வாதாரத்திற்காக டீ விற்கலாம் என முடிவு செய்த அவர் டீ விற்கும் தொழிலில் இன்று முதல் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு சம்பத் நகரில் இன்று காலை டீ விட்டுக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து வக்கீல் ஹாரூன் கூறும்போது,

”நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 41 ஆண்டு காலமாக வக்கீல் தொழில் செய்து வருகிறேன். தற்போது கரோனா முடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ விற்கும் தொழிலில் ஈடுபட முடிவு செய்து இன்று முதல் டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

நீதிமன்றங்கள் அனைத்தும் மூடியுள்ளன. முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இதனால் என்னை போன்ற வக்கீல்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக நீதிமன்றங்களை அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போன்ற வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.

மேலும் வக்கீல்களுக்கு தலா ஒரு லட்சம் தனிநபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் என் வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறேன்.

தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.