ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கரோன தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.


கரோன தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 539 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 140 பகுதிகளில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கரோனா பரிசோதனை இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை இயந்திரம் அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...