கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் 29-ஆம் தேதி ஆலோசனை

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்

News image
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
Updated On :26 ஜூலை 2020, 4:13 am

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வரும் 29 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  வரும் 31 -ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 29 -ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.