தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர்
தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள தனியார் குடோனில் காவலர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வில்பி, குயின்தாஸ், ஆரோக்கியம், சமந்தா அப்பு, அந்தோணி ரூபசிங்கே, விக்ரமசிங்கே, ரவிச்சந்திரன், ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்கள் கடந்த பிப்ரவரி 29- ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி க்கு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...