இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி பெண் பலியானார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந் நிலையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து சாரல் விழத்தொடங்கி பின்னர் பலத்த மழையாக மாறியது.
இந்த மழையால் இளையான்குடி பகுதியில் குளிர்ச்சி நிலவியது. வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை இதமாக இருந்தது. இதற்கிடையில் இளையான்குடி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் சேதுராஜ் மனைவி பாலாமணி(42) இப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் பாலாமணி மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



