திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வந்த ஐந்து பேருக்கு கரோனா

சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2020, 8:56 am

DIN



சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் இருந்து சேலத்திற்கு நாள்தோறும் பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் சராசரியாக 50க்கும் மேற்பட்ட பயணிகள் சேலம் வருகின்றனர். சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விமானம் வாயிலாக சேலம் வருகின்றனர். 

சென்னையிலிருந்து விமானம் மூம் சேலம் வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வரும் வரை ஒரு நாள் தனிமை மையத்தில் வைக்கப்படுகின்றனர். 

கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி பயணிகள் விமான சேவை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளில் இதுவரை 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், புதன்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 53 வயது பெண், அவருடைய 45, 49 வயது தம்பிகள், சேலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர், நாமக்கல்லைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 28 வயது இளைஞர் ஆகிய 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் விமானம் வாயிலாக நாள்தோறும் வந்து செல்கின்றனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் விமான பயணத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.