மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே பார்சல் லாரியில் தீ 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தா புரத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பார்சல் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :26 ஜூன் 2020, 3:30 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தா புரத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பார்சல் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் லாரி, துணிகள் மெத்தைகள் ரசாயனப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி வியாழக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது.

அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிபட்டணத்தை அடுத்த போத்தாபுரம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது லாரியின் இன்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வருவதை கண்ட ஓட்டுநர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் தீயானது லாரியின் பின்பகுதியில் பரவியது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ச. மோகன் குமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

லாரி ஓட்டுநர், கோயம்புத்தூரை சேர்ந்த கிருஷ்ணன் சிங் (60) அளித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டினம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.